லட்சுமி நரசிம்மர் கோயிலில் மகா கும்பாபிேஷகம்
ADDED :2891 days ago
திண்டுக்கல்: திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம், கன்னிமார் நகரில் உள்ள ஓம் சக்தி நாகம்மாள், ஆசை கணபதி, லட்சுமி நரசிம்மர் கோயிலில் திண்டுக்கல் மாவட்ட பூஜாரிகள் பேரமைப்பின் ஆகமக்குழு சார்பில் கும்பாபிேஷகம் நடந்தது. மாவட்ட தலைவர் உதயகுமார் தலைமை வகித்தார். விக்னேஷ்வரர் பூஜையுடன் துவங்கி கோ பூஜை, லட்சுமி பூஜை, மகா சங்கல்பம் நடந்தது. தீர்த்த கலசம், முளைப்பாரி அழைப்பு சிலைகள் பிரதிஸ்டையுடன் முதல் கால பூஜைகள் முடிந்தது. மறுநாள் இரண்டாம் கால யாக பூஜைகளுடன் தீர்த்த குடம் எடுத்து வந்து மகா கும்பாபி ேஷகம் நடந்தது. கும்பாபிேஷக விழாவில் ஒன்றிய பொருப்பாளர்கள் பூஜாரிகள் சந்தோஷ்குமார், ரவிக்குமார், சரவணக்குமார், முத்துச்சாமி, காளிமுத்து உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி தர்மராஜ் பூஜாரி செய்து இருந்தார். அன்னதானம் நடைபெற்றது.