வளர்பிறை முகூர்த்தம்: களை கட்டிய திருமணங்கள்
ADDED :2812 days ago
சேலம்: வளர்பிறை முகூர்த்தம் என்பதால், நேற்று சேலம் மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில், திருமண நிகழ்ச்சிகள் களை கட்டின. மாசி அமாவாசை முடிந்து, நேற்று வளர்பிறை முகூர்த்தமாகும். எனவே, சேலத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில், திருமண நிகழ்வு மற்றும் பெண் பார்க்கும் நிகழ்ச்சி ஆகியவற்றுக்கு, ஏராளமானோர் முன்பதிவு செய்திருந்தனர். நேற்று, கோட்டை பெருமாள் கோவிலில், எட்டு திருமணம், இரண்டு பெண் பார்க்கும் நிகழ்ச்சிகள் நடந்தன. சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில், 30, தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில், 26, உத்தம சோழபுரம் கரபுர நாதர் கோவிலில், 55 திருமணங்கள் நடந்தன. கோவிலில், திருமணங்கள் நடைபெற்றதால், இந்து சமய அறநிலையத்துறைக்கு, கணிசமான வருவாய் கிடைத்தது.