ஆண்டாள் நாச்சியார் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி
ADDED :2888 days ago
உடுமலை : உடுமலை, ஆண்டாள் நாச்சியார் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.உடுமலை, அருகே குறிஞ்சேரியில் ஆண்டாள் நாச்சியார் கோவில் அமைந்துள்ளது. இங்கு, மாதத்தின் மூன்றாவது செவ்வாய்க்கிழமை திருவாசகம் முற்றோதல் நடைபெறும். அதன்படி, நேற்று பக்தர்கள் சார்பில் நடந்த திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியில், திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் படிக்கப்பட்டன.தொடர்ந்து பக்தர்கள் இன்னிசைக்குழு சார்பில் பஜனையும் நடந்தது. அம்மனுக்கு, பால், பன்னீர், திருநீறு, திருமஞ்சனம், தேன் உள்ளிட்ட, 16 வகையான பொருட்களால் அபிேஷகம் செய்யப்பட்டது.சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.