சொக்கர் கோயில் விழா துவங்கியது
ADDED :2799 days ago
ராஜபாளையம், ராஜபாளையம் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மாசி மகா பிரம்மோற்சவம் துவங்கியது. மார்ச் 1 வரை பத்து நாட்கள் நடைபெறும் திருவிழா, கோயில் பரம்பரை அறங்காவலர் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா முன்னிலையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் யாகசாலை பூஜை, மூலவர், உற்சவருக்கு விசேஷ அபிேஷகங்கள், தினசரி பன்னிரு திருமுறை பாராயணம் நடைறுகிறது. பூஜைகளை தொடர்ந்து ஸ்வாசி அம்பாள் உற்சவர் புறப்பாடும், மாலையில் திருப்பாராயணம், கோலாட்டம், மாணவர்களின் இசை நிகழ்ச்சி, வீணை இசைக்கச்சேரி, கர்நாடக இசை நிகழ்ச்சி, வாழும் கலை அமைப்பினரின் பஜனை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தெப்போற்சவம் பிப். 27 ல் நடைபெறுகிறது.