சின்னாளபட்டி மாரியம்மன் கோயில் விழா
ADDED :3144 days ago
சின்னாளபட்டி, சின்னாளபட்டி ஜீவா நகரில், மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. முளைப்பாரி அழைப்புடன் துவங்கிய விழாவில், கரகம் பாலித்தல், அம்மன் ஊர்வலம் நடந்தது. ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர். விழாவை முன்னிட்டு அன்னதானம், கலைநிகழ்ச்சிகள் நடந்தது.