அம்மன் கோவில் மயானகொள்ளை திருவிழா
ADDED :2823 days ago
உளுந்துார்பேட்டை: காட்டுநெமிலி கிரா மத்தில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் மயானகொள்ளை திருவிழா நடந்தது. உளுந்துார்பேட்டை தாலுகா, காட்டுநெமிலி கிராமத்தில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானகொள்ளை திருவிழா, கடந்த 13ம் தேதி துவங்கியது. தொடர்ந்து தினசரி இரவு அம்மன் வீதியுலா நடந்தது. கடந்த 20ம் தேதி மதியம் 12:15 மணிக்கு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட அங்காளபரமேஸ்வரி அம்மன், கண் திறக்கும் நிகழ்ச்சியுடன் கோவிலில் இருந்து, புறப்பட்டு மயான பாதை நோக்கி ஊர்வலமாக சென்றது.அப்போது, வல்லாலராஜன்கோட்டையை அழித்து மயான பாதையை அடைந்தது. அங்கு பெண்கள் மடியேந்தி குழந்தை வரம் வேண்டினர். அவர்களுக்கு சாமி வந்து பூசாரிகள் ஆசி வழங்கினர்.