உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கைலாசநாதர் கோவில் குளத்தை சீரமைக்க முடிவு

கைலாசநாதர் கோவில் குளத்தை சீரமைக்க முடிவு

செங்கல்பட்டு : கைலாசநாதர் கோவில் குளத்தை சீரமைக்கும் பணி, 6.5 லட்சம் ரூபாய் மதிப்பில் துவங்கப்பட உள்ளது. செங்கல்பட்டு பெரியநத்தம் பகுதியில், புகழ்பெற்ற கைலாசநாதர் கோவில் உள்ளது. இங்கு, கோவிலுக்கு சொந்தமான குளம் பராமரிப்பின்றி சிரழிந்து, கழிவுநீர் குட்டையாக இருந்தது. இதையடுத்து, கோவில் குளத்தை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் முறையிட்டனர். இதையடுத்து, 6.50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, அதிகாரிகள் உத்தரவிட்டனர். இந்து சமய அறநிலையத் துறை, வேலுார் மண்டல உதவி கோட்ட பொறியாளர் கல்யாணசுந்தரம், நிர்வாக அதிகாரி செந்தில்குமார் ஆகியோர், குளத்தை ஆய்வு செய்து, சீரமைக்கும் பணிகளை துவக்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !