கரூர் ரங்கநாத ஸ்வாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா துவக்கம்!
கரூர்: கரூர் அருள்மிகு அபயப்பிரதான ரங்கநாத ஸ்வாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. பிரசித்தி பெற்ற கோவிலில் நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு அர்ச்சாவதாரத்துடன் விழா தொடங்கியது. வரும் 3 ம் தேதி வரை நாள்தோறும் திருநெடுந்தாண்டவம் திருமொழி நிகழ்ச்சிகள் நடக்கிறது. 4 ம் தேதி 7 மணிக்கு மோகினியார் அலங்காரம் திருக்கோலம் நடக்கிறது. வரும் 5 ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. மதியம் 12 மணிக்கு திருமஞ்சன ஸ்வாமி புறப்பாடு, 6 ம் தேதி வைகுண்ட நாராயணன் அவதாரம், 7 ம் தேதி வெண்ணைத்தாழி அவதாரம், 8 ம் தேதி ராமாவதாரம், 9 ம் தேதி வேணுகோபால கிருஷ்ணன், 10 ம் தேதி வாமனாவாதரம், 11 ம் தேதி ராஜதர்பார், 13 ம் தேதி ஆண்டாள் திருக்கோலம், 14 ம் தேதி ஆழ்வார் மோஷம், 15 ம் தேதி ஊஞ்சல் உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.