உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தியாகராஜ சுவாமிகள் ஆராதனை திருவையாறில் ஜன.,9 துவக்கம்!

தியாகராஜ சுவாமிகள் ஆராதனை திருவையாறில் ஜன.,9 துவக்கம்!

தஞ்சாவூர்: திருவையாறு ஸ்ரீதியாக பிரம்ம மகோற்ஸவ சபா சார்பில், சத்குரு தியாகராஜர் ஸ்வாமிகளின் 165வது ஆராதனை விழா, வரும் ஜன., 9ம் தேதி துவங்கி, 13ம் தேதி வரை நடக்கிறது. திருவையாறில் விழா தொடர்பான ஆலோசனைக்கூட்டம், சபா தலைவர் ஜி.ஆர்., மூப்பனார் தலைமையில் நடந்தது. செயலாளர் ஹரித்துவாரமங்கலம் பழனிவேலு உட்பட பலர் பங்கேற்றனர். ஆலோசனைக்கூட்டம் குறித்து ஜி.ஆர்., மூப்பனார் கூறியதாவது: சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சத்குரு தியாகராஜ ஸ்வாமிகளின் ஆராதனை விழா, ஜன., 9ம் தேதி மாலை 5 மணிக்கு துவங்குகிறது. திருப்பதி தேவஸ்தான சேர்மன் கண்மூரிபாசிராஜூ குத்துவிளக்கேற்றி, விழாவை துவக்கி வைக்கிறார். மத்திய அமைச்சர் வாசன், கலெக்டர் பா ஸ்கரன் உட்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை, காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை இசைநிகழ்ச்சிகள் நடக்கின்றன. 12ம் தேதி, காலை 6 மணி முதல் 8 மணி வரை தியாக பிரம்ம மகோற்ஸவ சபையின் சகஸ்ரநாம அர்ச்சனை நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான பஞ்சரத்தின கீர்த்தனை, 13 ம் தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது. அன்றிரவு பஞ்சரத்ன மல்லாரியுடன், தியாகராஜ சுவா மி திருவுருவச்சிலை ஊர்வலம் நடக்கிறது. இரவு ஆஞ்சநேய உற்சவத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவடைகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !