உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் நவாஷரி ஹோமம்!

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் நவாஷரி ஹோமம்!

தஞ்சாவூர்: தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில், உலக நன்மைக்காக "நவாஷரி ஹோமம் நடந்தது. தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காவும், அனைவரும் நோய் நொடி இல்லாமல் வாழவேண்டும் என்பதை வலியுறுத்தி நவாஷரி ஹோமம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு, கடந்த 21ம் தேதி, கணபதி ஹோமத்துடன் நவாஷரி ஹோமம் துவங்கியது. தொடர்ந்து, 22ம் தேதி நவரக்ஷ ஹோமம், மாலையில் மருத்துங்கிரணம் ஹோமமும், 23ம் தேதி காலையில் துர்கா ஹோமமும், மாலையில் பிரவேசபள ஹோமமும், 24ம் தேதி மகாமாரி மூலமந்திர ஹோமமும், மாலையில் அங்குரார்ப்பணம் ஏகளாப்ருதனம் ஹோமமும் நடந்தது. கடந்த 25ம் தேதி மகாமாரி மூலமந்திர ஹோமமும், மாலையில் சாந்தி ஹோமமும், 26ம் தேதி காலையில் நவாஷரி முதல் கால ஹோமமும், நேற்று இரண்டாம் காலம் ஹோமத்துடன் நிறைவு பெற்றது. மதியம் ஒரு மணிக்கு, மக்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது. மாலையில் லட்சதீபம் ஏற்றும் வைபவம் நடந்தது. நவஷாரி ஹோமத்தையொட்டி, தினமும் மாலை, 21ம் தேதி காமாட்சி, 22ம் தேதி சரஸ்வதி, 23ம் தேதி மகிஷாசுரமர்த்தினி, 24ம் தேதி மகா மாரியம்மன், 25ம் தேதி அன்னபூரணி, 26ம் தேதி மகாலெட்சுமி, 27ம் தேதி சர்வ அலங்காரத்திலும் மாரியம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிறைவுநாளான நேற்று முத்தங்கி அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழா ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தானம், இந்து சமய அறநிலையத்துறை, லட்ச திருவிளக்கு கமிட்டி, சிங்கவளநாட்டு கிராமத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !