கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் 63 நாயன்மார்கள் வீதியுலா
தஞ்சாவூர்: கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் சுவாமி கோவிலில் மாசிமக பெருவிழாவை முன்னிட்டு 63 நாயன்மார்கள் வீதியுலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் மாசிமகத்திற்கு புகழ் பெற்ற இக்கோவிலில் கடந்த 20ம் தேதி விழா கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் உற்சவம் தொடங்கியது. இதையடுத்து தின மும் காலை, மாலை நேரங்களில் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெற்று வருகிறது. இதையடுத்து பிப்.23 காலை வெள்ளிப்பல்லக்கில் விநாயகர், சுப்ரம ணியர், சுவாமி அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளும், தனித்தனி படிச்சட் டங்களில் 63 நாயன்மார்களின் உற்சவ திருமேனிகள் இரட்டை வீதியுலாவும் நடைபெற்றது. திருக்குடந்தை சிவனடியார் திருக்கூட்டம் சார்பில், பக்தர்கள் தேவார திருமுறைகள் பாடி சென்றனர். விழாவின் சிறப்பம்சமாக 27ம்தேதி சுவாமி, அம்பாள் தேரோட்டமும், மார்ச் 1ம் தேதி நண்பகல் மகாமக குளத்தில் தீர்த்தவாரியும் நடைபெறயுள்ளது.