அம்மன் சிலையும் ஆன்மிக கலையும்
இறைவழிபாடு மட்டும் ஆன்மிகம் அல்ல, கலை வழிபாடும் ஆன்மிகம் தான். ஏனென்றால்
அனைத்து கலைகளுக்கும் அதிபதி அந்த கடவுள் தானே. அப்படிப்பட்ட கடவுள் சிலைகளை நமக்கு பிடித்த வகையில் அலங்காரம் செய்து வழிபட்டால் அதைவிட பெரிய புண்ணியம் ஏதுவும் இல்லை.
மதுரை கீழஆவணி மூலவீதி சுவாமி சிலைகளை அலங்கார பொருட்கள் மற்றும் ஆன்மிக கலை பொருட்கள் தயாரிப்பாளர் சபிதா கூறியதாவது: செய்யும் தொழிலே தெய்வம் என்பா ர்கள். அதற்கு ஏற்ப அந்த தெய்வத்தை அலங்கரிக்கும் தொழிலையே நான் செய்து வருகிறேன். கோயில் மற்றும் வீட்டு விழாக்களில் வைக்கும் வகையில் அலங்கார அம்மன், மரப்பாச்சி பொம்மைகள், குழந்தை கிருஷ்ணர், ராதை உள்ளிட்ட சிலைகளை கண்கவரும்படி அலங் கரித்து தருகிறேன். இந்த சுவாமி சிலைகளை எல்லாம் அலங்கரிக்க தேவையான அனைத்து பொருட்களும் என்னிடம் உள்ளது.
பூஜை மற்றும் ஹோமத்திற்கு தேவையான காசி, கங்கை, ராமேஸ்வரம், அழகர்கோவில் தீர்த் தம், பஞ்சகாவியம், கோமியம் என ஆன்மிக பொருட்களையும் விற்பனை செய்கிறேன். வீட்டு க்குள் ஆரம்பித்த என் தொழில் இன்று ஒரு கடையாக உருவாகி வளர்ந்து கொண்டு இருக்கி றது.
பெண்களுக்கு ஆர்வமும், முயற்சியும் இருந்தால் மட்டும் போதும். என்னைப் போல சுயதொழி லும் சாதிக்கலாம், என்றார்.
இவரை பாராட்ட 99409 03085.