உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீரனூரில் செல்வநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஒன்றரை லட்சம் பக்தர்கள் தரிசனம்

கீரனூரில் செல்வநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஒன்றரை லட்சம் பக்தர்கள் தரிசனம்

காங்கேயம் : காங்கேயம் அருகே, 1,ஆண்டுகள் பழமையான கோவில் கும்பாபிஷேக விழா வில், ஒன்றரை லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

காங்கேயத்தை அடுத்த கீரனூரில், 1,ஆண்டுகள் பழமையான செல்வநாயகி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஐந்து நிலையுடன், 71 அடி உயர ராஜகோபுரம் ஆறு குதிரைகள், தங்க முலாம் பூசிய கொடிமரம், சுற்றுப்பிரகார மண்டபம் என திருப்பணி செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷே கம் விழா நிகழ்ச்சி, கடந்த, 19ல் தொடங்கியது.

(பிப். 25)  அதிகாலை ஆறாம் கால யாக பூஜையை தொடர்ந்து, இராஜ கோபுரங்கள், பரிவார கோபுரங்கள், பரிவார தெய்வங்களுக்கு சமகாலத்தில் கும்பாபிஷேகம், செல்வநாயகி அம்மன் மூலாலய மஹா கும்பாபிஷேகம் நடந்தது. ஹெலிகாப்டரில் பூ தூவப்பட்டு, புனித நீர் தெளிக் கப்பட்டது. மாலையில் சுவாமி திருவீதி உலா நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்க ளை சேர்ந்த, 1.5 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !