உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூரில் செல்வநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

திருப்பூரில் செல்வநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

திருப்பூர் : கீரனூர் செல்வநாயகி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா, வேத மந்தி ரங்கள் முழங்க, (பிப்.26) கோலாகலமாக நடந்தது. இதில், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

காங்கயம் அருகே கீரனூரில், ஆயிரம் ஆண்டு பழமையானதும், பிரசித்தி பெற்றதுமான,ஸ்ரீ செல்வநாயகி அம்மன் கோவில் உள்ளது. கீரனூர் காணியாளர்கள்; கொங்கு வேளாளர் மரபில், ஆதி, அந்துவான், காடை, விளையன், தேவேந்திரன், கீரை ஆகிய ஆறு குலங்களை சேர்ந்த மக்களுக்கு, இது குல தெய்வமாகும்.

இக்கோவில் முழுவதும், கற்கோவிலாக, கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம், வசந்த மண்டபம், ராஜகோபுரம், திருமதில் சுவர், பிரகார மண்டபம், மணி மண்டபம் உள்ளிட்டவை, அற்புதமான சிற்ப வேலைப்பாடுகளுடன் திருப்பணி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, கும்பா பிஷேக பூஜைகள், கடந்த, 19ல் துவங்கின.

கடந்த, 20ல், சாந்தி ஹோமம், திசா ஹோமம்; 21ல், வாஸ்து சாந்தி பூஜைகள் நடந்தன. கடந்த, 22ல், தீர்த்தங்கள், முளைப்பாலிகை ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து, ஆறு கால பூஜைகள் நடைபெற்றன. (பிப்.25) அதிகாலை, 2:30 மணிக்கு, மங்கள இசை, திருமுறை விண்ணப்பம் நடந்தது. 3:00 மணிக்கு, ஆறாம் கால யாக பூஜை; அதிகாலை, 4:30க்கு, நிறை வேள்வி நடந்தது. இதை தொடர்ந்து, கலசங்களை ஏந்திச் சென்ற சிவாச்சார்யார்கள், 6:45க்கு, மூலவர் கோபுரம், ராஜகோபுரம், பரிவார தெய்வங்களின் கோபுரங்களுக்கு, ஏக காலத்தில் வேத மந்திரங்கள் முழங்க, கும்பாபிஷேகம் செய்தனர். பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. ஹெலிகாப்டர் மூலம், கோவில் விமானங்கள், பக்தர்கள் மீது பூ தூவப்பட்டது. அதை தொடர்ந்து, காலை, 7:15க்கு, மூலவர் ஸ்ரீ செல்வநாயகி அம்மனுக்கு புனித நீரால், மகா கும்பாபிஷேகம் நடந்தது. (பிப். 25) மாலை, 4:00 மணிக்கு, அம்மனுக்கு மகா அபிஷேகம், தச தரிசனம், தீபாராதனை, மகா தரிசனம், சுவாமி திருவீதி உலா நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !