விநாயகர் கோவிலில் குடமுழுக்கு விழா
ADDED :2819 days ago
இடைப்பாடி: கொங்கணாபுரம் அருகே, எட்டிக்குட்டைமேடு பகுதியில் உள்ள, ஸ்ரீநிவாசபெருமாள், விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, கோவில்கள் கட்டப்பட்டு வந்தன. இதன் கோபுரப் பணிகள் முடிவடைந்ததையடுத்து, கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கோபுர கலசங்களுக்கு, எட்டிக்குட்டை ஊர் கவுண்டர், முக்கிய பிரமுகர்கள், கொங்கணாபுரம் முன்னாள் சேர்மன் கரட்டூர்மணி, ரவி மற்றும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.