மகாமக கிணறு
ADDED :2824 days ago
புரூருப சக்கரவர்த்தி திருக்கோஷ்டியூரில் திருப்பணி செய்த போது மகாமகம் பண்டிகை வந்தது. அந்நாளில் புனித நீராட விரும்பிய அவருக்காக, இத்தலத்தில் ஈசான்ய (வட கிழக்கு) திசையில் உள்ள கிணற்றில் கங்கையை பெருகச் செய்ததோடு, அதன் நடுவில் பெருமாள் காட்சி கொடுத்தார். “மகாமக கிணறு” எனப்படும் இத்தீர்த்தத்தில்,12 ஆண்டுக்கு ஒருமுறை வரும் மகாமக விழாவில், பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தம் தருவார்.