வெண்ணெய் லிங்கம்
ADDED :2824 days ago
கல், தர்ப்பை, மரகதம் ஆகியவற்றால் செய்யப்பட்ட லிங்கங்களை இப்போது பார்க்க முடிகிறது. ஆனால், வெண்ணெய்யால் செய்யப்பட்ட லிங்கம் ஒரு காலத்தில் சிக்கல் சிங்காரவேலர் கோயிலில் இருந்தது. நவநீதேஸ்வரர் எனப்பட்ட இந்த லிங்கம் இருந்த இடத்தில், இப்போது கல் லிங்கம் இருக்கிறது. “நவநீதம்” என்றால் வெண்ணெய். பக்தர்கள் தங்கள் கோரிக்கையை வெண்ணெய் உருகுவது போல், மனமுருகி வழிபட்டால், இந்த சிவனால் தீராத சிக்கலெல்லாம் தீரும்.