உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருவங்காடு ஐயப்பன் கோவிலில் ஆண்டு விழா

அருவங்காடு ஐயப்பன் கோவிலில் ஆண்டு விழா

குன்னுார்:குன்னுார் அருகே, அருவங்காடு ஐயப்பன் கோவிலில், 45வது ஆண்டு விழா மார்ச், 2ம் தேதி துவங்குகிறது.காலை, 6:30 மணிக்கு கணபதி ஹோமம், மாலை, 6:30 மணிக்கு லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை, பகவதி சேவை, பிரசாத வினியோகம் ஆகியவை நடக்கின்றன. திருவிழா நாளான, 3ம் தேதி காலை 6:30 மணிக்கு கணபதி ஹோமம், காலை 9:00 மணிக்கு கலச பூஜை, தீபாராதனை, பகல் 12:00 மணிக்கு செண்டை மேள வாத்தியங்கள் முழங்க ஐயப்பன் திருவீதி உலா நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு மகா தீபாராதனை, மங்கள ஆரத்தி, பிரசாத வினியோகம் ஆகியவை நடக்கின்றன. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !