உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தான்தோன்றிமலை வெங்கடரமணர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

தான்தோன்றிமலை வெங்கடரமணர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

கரூர்: தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோவிலில், நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது. கோவிலில் கடந்த, 21ல், மாசி மக திருத்தேர், தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அதை தொடர்ந்து நாள்தோறும் வெள்ளி கருட சேவை மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. நேற்று மாலை, 5:30 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். நாளை காலை, 9:00 மணிக்கு தேரோட்டம், வரும் மார்ச், 3ல் தெப்பத்திருவிழா நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !