முக்தீஸ்வரர் கோவிலில் கூட்டு பிரார்த்தனை
ADDED :2883 days ago
திருவள்ளூர் : ஆதிகுரு முக்தீஸ்வரர் கோவிலில், தேவாரம், திருவாசகம் ஓதி, கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாக நுழைவாயில் அருகே, ஆதிபொம்மியம்பாள் சமேத ஆதிகுரு முக்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், மாசி மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, மணவாள நகர் நால்வர் மட சிவனடியார்கள், நேற்று முன்தினம் காலை, 8:30 மணி முதல், பிற்பகல், 2:30 மணி வரை தேவாரம், திருவாசகம் ஓதி, உலக நன்மைக்காக கூட்டு பிரார்த்தனை நடத்தினர்.மேலும், மாசி மாத சதுர்த்தசியை முன்னிட்டு, சிவ பக்தர்கள் தேவார, திருவாசக திருமுறைகள் ஓதி நடராஜருக்கு அபிஷேக ஆராதனை நடத்தி, கூட்டு பிரார்த்தனை நடத்தினர். பிற்பகல், 1:00 மணிக்கு, மகா தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.