மாகாளியம்மன் மாசித்திருவிழாவில் பால்குட ஊர்வலம்
ADDED :2884 days ago
சேலம்: அன்னதானப்பட்டி, வள்ளுவர் நகர் மாகாளியம்மன் கோவில் மாசித்திருவிழா, கடந்த, பிப்., 13ல், பூச்சாட்டுதலுடன் துவங்கி நடந்துவருகிறது. நேற்று காலை, எஸ்.ஆர்.எஸ்., தோட்டத்திலிருந்து துவங்கிய பால்குட ஊர்வலம், கோவிலை அடைந்தது. 300க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, அம்மனுக்கு அபி ?ஷகம் செய்து, சிறப்பு பூஜை நடந்தது. பின், பெண்கள் பொங்கல் வைத்து, அம்மனை வழிபட்டனர். இரவில் அலகு குத்துதல், அக்னி கரக ஊர்வலம் நடந்தது. நாளை, மஞ்சள் நீராட்டு விழா, மார்ச், 3ல், ஊஞ்சல் உற்சவம், சத்தாபரணம் ஆகியவை நடக்கிறது.