தண்டு மாரியம்மன் கோவில் மாசிமக தேர் திருவிழா
ADDED :2814 days ago
ராசிபுரம்: பட்டணம், தண்டு மாரியம்மன் கோவிலில், மாசிமகம் தேர் திருவிழா நடந்தது. ராசிபுரம் அருகே, பட்டணம் தண்டு மாரியம்மன் கோவிலில், மாசிமகம் திருவிழா, கடந்த, 19ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 23ல் பூங்கரகம் எடுத்தல்; 24, 25, 26 ஆகிய நாட்களில், கரகம் வீட்டுக்கு அழைத்துச் செல்லுதல் நடந்தது. கடந்த, 27ல் மல்லிகை பூ கரகம் ஊர்வலம் நடந்தது. நேற்று, தேர்திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று, பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், அலகு குத்துதல் நடை பெறுகிறது. தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.