உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்

சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்

தர்மபுரி: தர்மபுரி எ.கொல்லஹள்ளி சாலையில் உள்ள பூபதி தோட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம், வரும், 4ல் நடக்கிறது. இதையொட்டி, இன்று காலை, 9:00 மணிக்கு, கணபதி பூஜை, நவக்கிரக ஹோமம், யாக சாலை பூஜை நடக்கிறது. 10:00 மணிக்கு சாய்பாபா முத்துபவள தேர் ஊர்வலம் நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு சாய்பாபா திருவுருவச்சிலை பிரதிஷ்டை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும், 4 காலை, 9:00 மணி முதல், 10:30 மணிக்குள் சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !