மாசி மகம்: பித்ரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :2815 days ago
காஞ்சிபுரம்: 27 நட்சத்திர கோயிலில் மாசி மகத்தினை முன்னிட்டு, மக நட்சத்திர அதிதேவதையான பித்ரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் - வந்தவாசி நெடுஞ்சாலையில் உக்கம்பெரும்பாக்கம் கிராமத்திற்கு தெற்காக கூழமந்தல் ஏரிக்கரையில் நட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலும், 27 நட்சத்திர அதிதேவதைகள் கோயில்களும், சனீஸ்வரர், ராகு, கேது பகவான் கோயில்கள் என அனைத்தும் ஒரு சேர அமைந்துள்ளது. மாசி மகம் நட்சத்திர தினமான இன்று காலை 8 மணிக்கு நட்சத்திர விருட்ச விநாயகர் பூஜை, 27 நட்சத்திர அதிதேவதைகள், ராகு கேது, சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் 9.30 மக நட்சத்திர அதிதேவதையான பித்ரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். மகாதீபாரதனைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.