பஞ்ச கருட சேவை கோலாகலம்
ADDED :3113 days ago
சேலம்: பஞ்ச கருட சேவை விழா, கோலாகலமாக நடந்தது. சேலம், சிங்கமெத்தை இளைஞர்களின் ஸ்ரீவாரி பஞ்சகருட சேவை குழு சார்பில், மூன்றாமாண்டாக, மாசி மக நட்சத்திரத்தன்று, பஞ்ச கருட சேவை விழா, நேற்று நடந்தது. மாலை, 7:00 மணிக்கு, கிருஷ்ணன் கோவில் தெரு மற்றும் பென்னாடம் வெங்கட்ராமன் தெரு சந்திப்பில், விழா நடந்தது. பட்டைக்கோவில் வரதராஜ பெருமாள், அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள், அசோக் நகர் லட்சுமி வெங்கடேச பெருமாள், கிருஷ்ணர் கோவில் தெரு கிருஷ்ணன் தேவஸ்தானம், பொன்னம்மாபேட்டை ஆஞ்சநேயர் தேவஸ்தானம் ஆகிய கோவில்களிலிருந்து, கருட வாகனத்தில், சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள், தரிசனம் செய்தனர்.