உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோஷ்டியூரில் மாசி தெப்ப விழா: பெண்கள் விளக்கேற்றி வழிபாடு

திருக்கோஷ்டியூரில் மாசி தெப்ப விழா: பெண்கள் விளக்கேற்றி வழிபாடு

திருப்புத்துார்: சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் மாசித் திருவிழாவில், நேற்று பகல் மற்றும் இரவில் தெப்பத்தில் சுவாமி வலம் வந்தார். இக்கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவம் 11 நாட்கள் நடக்கும். பிப்.,21ல் துவங்கி தினமும் பெருமாள் தேவியருடன் புறப்பாடும், இரவில் வாகனங்களில் திருவீதி உலாவும் நடந்தது. நேற்று காலை 5:30 மணிக்கு மூலவருக்கு அபிேஷகம் நடந்தது.தொடர்ந்து ஏகாந்த சேவை அலங்காரத்தில் பெருமாள் உலா வந்தார். மதியம் 12:50 மணிக்கு பகல் தெப்பம் துவங்கி வலம் வந்தது. பின் மீண்டும் தெப்ப மண்டபத்திற்கு பெருமாள் எழுந்தருளினார்.இரவு 11:00 மணிக்கு தெப்பம் மும்முறை குளத்தை வலம் வந்தது. இன்று காலை தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரியும், மாலையில் பெருமாள் தங்கப்பல்லக்கில் கோயில் திரும்புதலும் நடக்கும். கடந்த நான்கு நாட்களாக குளத்தைச் சுற்றிலும் பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !