மாசி மகம் சிறப்பு பூஜை: வால்பாறையில் பால்குடம் வழிபாடு
ADDED :2885 days ago
வால்பாறை: வால்பாறையில் உள்ள பல்வேறு கோவில்களில் மாசி மக விழா கொண்டாடப்பட்டது.வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், மாசி மக விழா நேற்று முன் தினம் மாலை ேஹாம பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து சிறப்பு அபிேஷக பூஜை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வாழைத்தோட்டம் காமாட்சியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகமும், அலங்கார பூஜையும் நடந்தது. எம்.ஜி.ஆர்., நகர் மாரியம்மன் கோவில், சிறுகுன்றா மாகாளியம்மன் கோவில், ஈட்டியார் மாரியம்மன் கோவில், கவர்க்கல் காமாட்சியம்மன் கோவில்களில், மாசி மகம் விழா, சிறப்பு அபிஷேகம், அலங்கார வழிபாடு நடந்தது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.