திருப்பரங்குன்றம் பங்குனி திருவிழா: மார்ச் 21ல் துவக்கம்
ADDED :2872 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்ச் 21 பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது.இன்று (மார்ச் 5) காலை 10:00 மணிக்கு தேங்காய் தொடும் முகூர்த்தம் நடக்கிறது. மார்ச் 20 மாலை கோயில் கம்பத்தடி மண்டபத்தில் அனுக்ஞை விநாயகர் முன் அனுக்ஞை, வாஸ்துசாந்தி பூஜை நடக்கும்.முக்கிய நிகழ்வாக மார்ச் 25 வெள்ளி யானையில் சுவாமி கைபார நிகழ்ச்சி, 30 பங்குனி உத்திரம், ஏப்., 1 பட்டாபிஷேகம், 2 மதியம் 12:30 முதல் 12:50 மணிக்குள் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு திருக்கல்யாணம், 3 காலையில் தேரோட்டம், 4 தீர்த்தவாரி உற்ஸவம் நடக்கிறது.விழா நாட்களில் தினமும் ஒரு வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்து அருள்பாலிப்பார்.