உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில் திருக்கல்யாணம்

சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில் திருக்கல்யாணம்

சேலம்: மாசி மாதத்தில், சவுராஷ்டிரா சமுதாய மக்களால், சேலம், கோட்டை, அழகிரிநாதர் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது. அதன்படி, நேற்று அதிகாலை, 6:00 மணிக்கு, சிறப்பு பூஜையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, அழகிரிநாதர், ஸ்ரீதேவி, பூதேவிக்கு, ராஜ அலங்காரம் சாத்துபடி செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. காலை, 11:30 மணிக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. பின், அழகிரிநாதருக்கும், ஸ்ரீதேவி, பூதேவிக்கும், வேத இதிகாச பூராணங்கள் ஓத கல்யாணம் நடந்தது. மணக்கோலத்தில், சுவாமி கோவிலை சுற்றி வந்தார். அப்போது, ஏராளமான பக்தர்கள், சுவாமியை தரிசித்தனர். மேலும், மாசி முகூர்த்தத்தையொட்டி, நேற்று, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஏழு ஜோடிகள், திருமணம் செய்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !