உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலபிஷேகப் பலன்!

பாலபிஷேகப் பலன்!

அரக்கோணத்திலிருந்து தக்கோலம் செல்லும் வழியில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. திருமாதலம்பாக்கம். இங்குள்ள திருமாலீசர் கோயிலில் ஸ்ரீநிவாஸப் பெருமாள் தனிச்சன்னதியில் எழுந்தருளியுள்ளது விசேஷம். இவரது விக்ரகத்திற்கு பாலபிஷேகம் செய்விக்கும் போது அவரது திருமேனியில் வழிந்தோடும் பால் நீல நிறத்தில் தோன்றுகிறது. இவருக்கு தொடர்ந்து பதினொரு ஏகாதசி நாட்கள் அல்லது பதினொரு சனிக்கிழமைகளில் பாலபிஷேகம் செய்து வர, குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !