காசிக்கு சென்று நீராடினால் பாவம் நீங்கிவிடும் என்கிறார்களே! ஏன்?
ADDED :2790 days ago
தன் முன்னோர்களின் பாவம் தீர்க்க, பகீரதன் செய்த தவசக்தியால் ஆகாய கங்கையே பூமிக்கு வந்தது. அங்கு தர்ப்பணம் செய்ததும் அவனது முன்னோர் முக்திஅடைந்தனர். அதுபோல் நமது முன்னோரும் பிறப்பற்ற நிலையடைய இங்கே தர்ப்பணம் செய்ய வேண்டும். பிறந்தால் பாவம் செய்வது நிச்சயம். பிறப்பு இல்லாமல் இறைவன் திருவடியிலேயே இருந்தால், பாவத்தைப் பற்றி சிந்திக்கக் கூட நேரமிருக்காதே!