பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம்
ADDED :2864 days ago
நெட்டப்பாக்கம்: வடுக்குப்பம், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், திருக்கல்யாண வைபவம் நடந்தது. நெட்டப்பாக்கம் அடுத்த வடுக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள பத்மாவதி தாயார்சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், நேற்று முன்தினம்மாலை 6.30 மணிக்கு,திருக்கல்யாண வைபவம் நடந்தது. முன்னதாக, பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.