உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காமாட்சியம்மன் கோவில் திருக்கல்யாண திருவிழா

காமாட்சியம்மன் கோவில் திருக்கல்யாண திருவிழா

பொள்ளாச்சி: கிணத்துக்கடவு அடுத்துள்ள கொண்டம்பட்டியில், காமாட்சியம்மன் திருக்கல்யாண விழா நடந்தது.கிணத்துக்கடவு அருகே, கொண்டம்பட்டி காமாட்சியம்மன் கோவில் விழா, நேற்று முன்தினம் சுவாமி சீர் எடுத்து வருதல், சக்தி கரகம் அழைத்தலுடன் துவங்கியது. நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு கணபதி ேஹாமத்துடன் இரண்டாம் நாள் விழா துவங்கியது. வெண்கல பூவோடுக்கு பூ வளர்த்தல், அம்மன் அலங்கார பூஜை, அம்மன் திருக்கல்யாணம் நடந்தது.அதனை தொடர்ந்து, மாலை, 3:15 மணிக்கு அலகு குத்துதல், பூவோடு ஊர்வலம், அன்னதானம் நடந்தது. இன்று, 7ம் தேதி காலை சிறப்பு பால் பூஜை, மாவிளக்கு ஊர்வலம் நடக்கிறது. நாளை, 8ம் தேதி காலை, 6:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, 8:00 மணிக்கு மஞ்சள் நீராடுதல் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !