உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாரபரமேஸ்வரர் கோவிலில் புத்தாண்டு ஏகாதச மகாருத்ரயாகம்; டிச. 31 துவக்கம்

சாரபரமேஸ்வரர் கோவிலில் புத்தாண்டு ஏகாதச மகாருத்ரயாகம்; டிச. 31 துவக்கம்

கும்பகோணம்: திருச்சேறை சாரபரமேஸ்வரர்கோவிலில் ஆங்கில புத்தாண்டு ஏகாதச மகாருத்ரயாகம் டிச. 31ம் தேதி முதல்கால யாகபூஜையுடன் தொடங்குகிறது.
கும்பகோணம் அருகே உள்ள திருச்சேறையில் ஞானாம்பிகை சமேத சாரபரமேஸ்வரர்கோவில் உள்ளது. இங்கு தனிசன்னதிகொண்டுள்ள ரினவிமோசன லிங்கேஸ்வரருக்கு பிரதி திங்கள் தோறும் மூன்றுகால சிறப்பு அபிஷேகம், கூட்டு வழிபாடு நடைபெறுவது சிறப்பு. தேவாரபாடல் பெற்ற காலபைரவர் சன்னதியும், மூன்று துர்க்கைகள் ஒரே சன்னதியில் அருள்பாலிப்பதும் இத்தலத்தின் சிறப்பாகும். சிறப்புகள் பெற்ற இத்தலத்தில் ஆண்டுதோறும் ஆங்கிலப்புத்தாண்டு தினத்தில் ஏகாதச மகா ருத்ரயாகம் நடைபெறுவது வழக்கம்.

இவ்வாண்டும் டிச. 30ம் தேதி காலை 9 மணிக்கு மேல் விக்னேஷ்வர பூஜை நடந்தது. டிச. 31ம் தேதி மாலை 4 மணிக்கு முதல்கால யாகபூஜை தொடங்கி நடக்கிறது. ஜனவரி 1ம் தேதி காலை 7.30 மணிக்கு ஏகாதச மகாருத்ரயாகத்தின் இரண்டாம் காலம் தொடங்குகிறது. காலை 9.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. காலை 11 மணிக்கு 11 கடங்கள் ஊர்வலமாக புறப்படுதல் நடக்கிறது. தொடர்ந்து தனிசன்னதி கொண்டுள்ள ரினவிமோசன லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனையும் தொடர்ந்து கூட்டுப்பிரார்த்தனையும் நடக்கிறது.
மாலை 6 மணிக்கு காலபைரவருக்கு பைரவ சகஸ்ரநாம ஹோமம் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு பைரவர் சிறப்பு அபிஷேகமும் கூட்டு வழிபாடும் நடக்கிறது.
ஏகாதச மகா ருத்ரயாக ஏற்பாடுகளை தக்கார் கிருஷ்ணகுமார், நிர்வாக அதிகாரி நிர்மலாதேவி மற்றும் கோவில் அர்ச்சகர் சுந்தரமூர்த்திகுருக்கள் உள்ளிட்ட கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !