வனத்திருப்பதியில் ஜன. 5ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு
உடன்குடி: வனத்திருப்பதி ஸ்ரீநிவாச பெருமாள், ஆதிநாராயணன் சிவனணைந்த பெருமாள் கோ யிலில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வரும் ஜன.5ம் தேதி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.புன்னைநகர் வனத்திருப்பதி ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் ஆதிநாராயணன்- சிவனணைந்த பெருமாள் கோயில் அப்பகுதியில் மிகவும் பிரசித்திப் பெற்றது. இக்கோயிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஜன. 1ம் தேதி அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு கோபூஜையும், தொடர்ந்து திருமஞ்சனம் (அபிஷேகம்) சிறப்பு அலங்கார பூஜையும் பிற்பகல் 2 மணிக்கு சிறப்பு சிங்காரி செண்டை மேள நிகழ்ச்சியும் நடக்கிறது. பக்தர்களின் வசதிக்காக சிறப்பு அரசு பஸ்களும் இயக்கப்படுகிறது.
இதுபோன்று வரும் ஜன.5ம் தேதி காலை 6 மணி முதல் அனந்த சயன சேவையும், பகல் 1 மணிக்கு உற்சவர் திருமஞ்சனமும், மா லை 6 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும் அதை தொடர்ந்து நிவாசபெருமாள் சேஷ வாகனத்தில் திருவீதி உலாவும் நடக்கிறது. இரு தினங்களிலும் ஓட்டல் சரவண பவன் சார்பில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பிரசாதம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகøள கோயில் நிறுவனர் ராஜகோபால் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.