ஸ்ரீரங்கத்தில் ஜன., 4ல் மோகினி அலங்காரம்
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரெங்கநாதர் ஜனவரி நான்காம் தேதி மோகினி கோலத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார்.
ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாதர் கோவிலில் கடந்த 25ம் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடந்து வருகின்றது.
பகல்பத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மோகினி அலங்காரம் ஜனவரி நான்காம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் ஸ்ரீரெங்கநாதர் மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். அன்று காலை ஆறு மணிக்கு ஸ்ரீரெங்கநாதர் மூலஸ்தானத்தில் இருந்து மோகினி கோலத்தில் புறப்பட்டு காலை ஏழு மணிக்கு அர்ச்சுண மண்டபத்தை அடைகிறார். 7.30 மணி முதல் 11 மணி வரை அரையர் சேவை நடக்கிறது. பிறகு ராவணனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.
உபயக்காரர் மரியாதை பொதுஜன சேவைக்கு பிறகு மாலை ஐந்து மணிக்கு அர்ச்சுண மண்டபத்தில் இருந்து புறப்பட்டு ஆர்யபட்டாள் வாசலை அடைகிறார். ஆழ்வாராதிகள் மரியாதையாகி இரவு ஒன்பது மணிக்கு ஸ்ரீரெங்கநாதர் மூலஸ்தானத்தை அடைகிறார்.
மறுநாள் வைகுண்ட ஏகாதசி விழா முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. சொர்க்கவாசலை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தரிசிப்பார்கள்.