மாயக்காரி மாசாணியம்மன் கோயிலில் மயான பூஜை
ADDED :2870 days ago
கள்ளிமந்தையம்: கள்ளிமந்தையம் அருகே அம்மாபட்டி மாயக்காரி மாசாணியம்மன் கோயிலில் நாளை (மார்ச் 10) மயான பூஜை நடக்கிறது. இரவு 10 மணிக்கு நடக்கும் இப்பூஜையின் போது,கருப்பணசாமி 16 அடியில், சயனக்கோலத்தில், மாசான கருப்பு என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டு, கண் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.இதில் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டால் நலம்பெறலாம் என்பது நம்பிக்கை. இப்பூஜையையொட்டி இரவு வாகன வசதி, அன்னதானத்திற்கும் ஏற்பாடு செய்துள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.