உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நன்னாடு கோவிலில் மாசி உற்சவ பெருவிழா

நன்னாடு கோவிலில் மாசி உற்சவ பெருவிழா

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த நன்னாடு கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில், மாசி உற்சவ பெருவிழா நடந்தது. நன்னாடு கிராமத்தில் அமைந்துள்ள விநாயகர், முத்துமாரியம்மன், ரதி மன்மதன், பொறையாத்தம்மன், பூரணி பொற்கலை சமேத அய்யனாரப்ப சுவாமிகளுக்கு உற்சவ பெருவிழா நடைபெற்றது. கடந்த 17ம் தேதி மன்மதன் சுவாமிக்கு கொடியேற்றத்தோடு பந்தக்கால் நட்டு விழா துவங்கியது. அதனை தொடர்ந்து மன்மதன் சுவாமிக்கு திருக்கல்யாணம், ரதி மன்மதன் வீதியுலா, ஊரணி பொங்கல் வழிபாடு நடைபெற்றது. பகல் 12:00 மணிக்கு ரதி மன்மதன் தேரை கிராம பொதுமக்கள் ஒன்றுகூடி வடம் பிடித்து, மாடவீதிகள் வழியாக இழுத்து சென்றனர். இரவு 10:00 மணிக்கு தெருக்கூத்து, மறுநாள் அதிகாலை 5:00 மணிக்கு காமன் தகனம், கடந்த 3ம் தேதி மாலை 6:00 மணிக்கு மன்மதன் உயிர்த்தெழுதல், பொறையாத்தம்மன் அம்மன் தேர் திருவிழா, 4ம் தேதி சுவாமிகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. விழா ஏற்பாடுகளை நாட்டாண்மை பரமாத்மா மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !