ராமன் வழிபட்ட பெருமாள்
ADDED :2807 days ago
இராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினம் கடலில் நவபாஷாண நவகிரகங்கள் நிறுவி வழிபட்ட ராமர். கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள திருப்புல்லாணி ஆதிஜெகன்னாதப் பெருமாளை வழிபட்டு அருளாசி பெற்றார். மேலும், தர்ப்பைப் புல்லில் அமர்ந்து தவம் மேற்கொண்டார். அத்துடன் தர்ப்பைப் புல்வினைப் பாயாக்கி அதில் சயனித்திருக்கிறார். அதை நினைவூட்டும் வகையில் இத்திருக்கோயிலில் ராமர் சயனக் கோலத்திலுள்ள திருவுருவை தரிசிக்கலாம்.