உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மனிதனுக்கு மட்டுமே...!

மனிதனுக்கு மட்டுமே...!

புழு, பூச்சி எல்லாவற்றுக்குமே உயிர் இருக்கிறது. ஆனால், உயரிய சரீரம் இல்லை. பேசும் வல்லமை இல்லை. ஆனால், மனிதனுக்கு மட்டுமே உயரிய சரீரம் தரப்பட்டிருக்கிறது. அவன் பேசுகிறான், பாடுகிறான், சிரிக்கிறான், அழுகிறான்... இந்த சரீரம் எதற்காக மனிதனுக்கு தரப்பட்டது. ஆனந்தத்தை அனுபவிக்க... ஆனால், மனிதன் பாவங்கள் செய்கிறான்.  அந்த பாவங்களே ‘ஆனந்தம்’ என நினைக்கிறான்.  பைபிளில் ‘இயேசு கிறிஸ்துவினுடைய சரீரம் ஒரே தரம் பலியிடப்பட்டதினாலே, அந்த சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப் பட்டிருக்கிறோம்’ என்று சொல்லப்பட்டுள்ளது. ‘ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம் பண்ணினீர்’ என்று அவர் சொல்கிறார். அவர் பாவிக ளுக்காக தம் உயிரைக் கொடுத்தார். பிறர் செய்த குற்றங்களுக்குரிய தண்டனையை தானே ஏற்றார். அதற்காக அனைவரும் அனுபவிக்க வேண்டிய துன்பத்தை அவர்  ஒருவரே அனுபவித்தார். நமது சரீரம் பிறருக்கு சேவை செய்வதற்காகவே படைக்கப்பட்டிருக்கிறது. பிறர் சேவையை தம் சேவையாக நினைப்பவரே தேவனுக்கு பிரியமானவர் ஆவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !