உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தில்லைவிடங்கன் பேச்சியம்மன் கோவிலில் பால்குடத் திருவிழா

தில்லைவிடங்கன் பேச்சியம்மன் கோவிலில் பால்குடத் திருவிழா

கிள்ளை : கிள்ளை அடுத்த தில்லைவிடங்கன் பேச்சியம்மன் கோவிலில் கன்னியம்மன் பால் குடத் திருவிழாவில் பக்தர்கள் பால் குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.கிள்ளை அடுத்த தில்லைவிடங்கன் பேச்சியம்மன் கோவிலில் கன்னியம்மன் பால் குடம் திருவிழா ஆண்டுதோறும் விமர்சையாக நடந்து வருகிறது. இந்த ஆண்டிற்கான விழாவை முன்னிட்டு நேற்று மதியம் 1:30 மணிக்கு காமாட்சியம்மன் உடனுறை ஏகாம்பரநாத சுவாமி கோவிலில் இருந்து பால் குட ஊர்வலம் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது, ஊர்வலம் பேச்சியம்மன் கோவிலை சென்றடைந்ததும், சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனையும், தொடர்ந்து அன்னதானமும் நடந்தது. ஏற்பாடுகளை தியாகராஜன் தலைமையிலான விழாக் குழுவினர்செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !