உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முதுமலை யானைகள் முகாமில் ஸ்லிம் ஆகும் பழநி கஸ்தூரி

முதுமலை யானைகள் முகாமில் ஸ்லிம் ஆகும் பழநி கஸ்தூரி

பழநி: முதுமலை புத்துணர்வு முகாமில், பழநி கோயில் யானை கஸ்தூரிக்கு, உடல் எடை குறைப்பிற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டதில் 150 கிலோ எடை குறைந்துள்ளது. தமிழக அரசு சார்பில், கோயில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் முதுமலையில் நடக்கிறது. பழநி கோயில் யானை கஸ்தூரி உட்பட 38 யானைகள் இதில் பங்கேற்றுள்ளன. 48 நாட்கள் நடைபெறும் முகாமில், யானைகளின் உடல் எடை சமன்படுத்தல், சத்தான உணவுப் பழக்கம், நோய்

குறைபாடுகளுக்கான சிகிச்சை மட்டுமின்றி பாகன்களுக்கான பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: முதுமலை முகாமில் பங்கேற்றுள்ள யானைகளில், உடல் எடை வாரியான பட்டியலில் கஸ்தூரி இரண்டாமிடம்(6 ஆயிரத்து 50 கிலோ) பெற்றுள்ளது. 43 வயதுள்ள இந்த யானைக்கு சராசரியாக, 5000 முதல் 5500 கிலோவிற்குள் தான் எடை இருக்கவேண்டும். கோயில் யானை என்பதால், தேங்காய் அதிகளவில் கொடுத்திருக்க

வாய்ப்புள்ளது. மேலும் போதிய நடைப்பயிற்சி இல்லாததால், எடைஅதிகரித்துள்ளது. இதன் உடல் எடையை குறைப்பதற்கான பயிற்சிகள், முதுமலையில் அளிக்கப்பட்டு வருகிறது. பத்து நாட்களில், 150 கிலோ வரை குறைந்துள்ளது. உணவு அளவைக் குறைந்தபோதும், கூடுதல் சத்துள்ள பொருட்கள் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !