சுந்தர விநாயகர் கோவிலில் சிறப்பு ஹோமம்
திருத்தணி : சுந்தர விநாயகர் கோவிலில், பங்குனி மாதம் முதல் நாளையொட்டி, நேற்று, சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் நடந்தன. திருத்தணி, ம.பொ.சி., சாலையில் உள்ள, சுந்தர விநாயகர் கோவிலில், ஒவ்வொரு தமிழ் மாதம், முதல் நாளில், சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.அந்த வகையில், நேற்று, பங்குனி மாதம் முதல் நாளையொட்டி, நேற்று காலை, சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதற்காக கோவில் வளாகத்தில், ஒரு யாகசாலை, இரண்டு கலசங்கள் வைத்து, அதிகாலை, 5:00 மணிக்கு, சிறப்பு ஹோமம் நடந்தது.தொடர்ந்து, காலை, 6:00 மணிக்கு, மூலவர் சுந்தர விநாயகருக்கு பால், பன்னீர், தேன் மற்றும் பஞ்சாமிர்தம் போன்றவற்றால், சிறப்பு அபிஷேகம் நடந்தது.மாலை, 6:00 மணிக்கு, மூலவருக்கு வண்ண மலர்களால், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, மூலவரை வழிபட்டனர்.