உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேதுக்கரையில் சங்கல்ப பூஜைக்கு இடையூறு விளைவிக்கும் ஆடுகள்: பக்தர்கள் அவதி

சேதுக்கரையில் சங்கல்ப பூஜைக்கு இடையூறு விளைவிக்கும் ஆடுகள்: பக்தர்கள் அவதி

கீழக்கரை: திருப்புல்லாணி அருகே சேதுக்கரை கடற்கரையில் புனித நீராடவும், முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி உள்ளிட்ட சங்கல்ப பூஜைகளை
நிறைவேற்றியும் வருகின்றனர்.

சேதுக்கரை கடற்கரைக்கு வருகை தரும் பக்தர்கள் கடற்கரை மணலில் அமர்ந்து பித்ருக்கடன், சங்கல்ப பூஜைகளை நிறைவேற்றும் போது, ஏராளமான ஆடுகள் கூட்டமாக உள்ளே புகுந்து பூஜைப்பொருட்களை தும்சம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது.  சிவகங்கையை சேர்ந்த பக்தர்கள் நமசிவாயம்,ராமானுஜம் கூறியதாவது: நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவதற்காக வருகை தருகின்றனர்.

புரோகிதர்களுக்கும், பக்தர்களுக்கும் இடையே புகுந்து ஒரே நேரத்தில் 20க்கும் மேற்பட்ட ஆடுகள் தொல்லை தருகிறது. அரிசி,பழம், வாழை இலை உள்ளிட்ட பூஜைபொருட்களை தின்று, இடையூறு ஏ ற்படுத்துகிறது.  கிராமங்களில் வீடுகளில் ஆடு வளர்ப்போர், ஏராளமான ஆடுகளை மேய்ச்சலுக்காக இங்கு விட்டு விடுகின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகம், தொல்லை தரும் ஆடுகளை கட்டுப்படுத்தவும், உரிமையாளர்களுக்கு, அறிவுரை கூறி அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !