அப்பப்பா... போதும்!
ADDED :2796 days ago
பணம், துணிமணி, பொன், பொருள், பூமி, வீடு போன்றவற்றை தானம் பெறுவோர் எவ்வளவு கிடைத்தாலும் போதும் என சொல்வதில்லை. ஆனால், அன்னதானத்தில் சாப்பிடுபவர் வயிறு நிறைந்ததும் பரிமாறுபவரிடம், ‘அப்பப்பா... போதும்! வயித்தில இடமில்லை’ என சொல்வது உறுதி. தானம் அளிப்பவருக்கு முழுமையான பலன் உண்டாகும் என்பதால் அன்னதானம் சிறந்தாக இருக்கிறது. ‘அன்னம் பரப்பிரம்ம சொரூபம்’ (உணவு கடவுளின் வடிவம்) என்பர். இதையே கிராமத்தில் ‘சோற்றில் இருக்கிறார் சொக்கநாதர்’ எனக்குறிப்பிடுவர்.