உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூரில், 25 ம் தேதி ஸ்ரீராம நவமி உற்சவம்

திருப்பூரில், 25 ம் தேதி ஸ்ரீராம நவமி உற்சவம்

திருப்பூர் : திருப்பூர், ஸ்ரீ ராம பஜனை மடத்தில், ராம நவமி மற்றும் சீதா கல்யாண மகா உற்சவ விழா நடக்கிறது. திருப்பூர், முன்சீப் சீனிவாசபுரம், ஸ்ரீ ராம பஜனை மடத்தில், 105வது ராம நவமி மகா உற்சவம், வரும் 25ம் தேதி துவங்குகிறது.அன்று காலை, ஸ்ரீ ராம விநாயகர் அபிேஷகம் நடக்கிறது. தொடர்ந்து, 27ம் தேதி வரை, காலை, 7:00 மணிக்கு, விஷ்ணு சகஸ்ர நாம அர்ச்சனை நடக்கிறது. 25ம் தேதி இரவு, 7:00 மணிக்கு, கோழியாலம், ஸ்ரீ பரதன் சுவாமியின், ஸ்ரீமத் ராமாயண சொற்பொழிவு நடக்கிறது. வரும், 27ம் தேதி, ஸ்ரீ ராமர் பட்டாபிேஷகம், 28ம் தேதி, இரவு, 7:00க்கு, ஸ்ரீ ஆஞ்சநேய பிரபாவம் சுந்தர காண்ட உரையுடன் சொற்பொழிவு நடக்கிறது.

ஸ்ரீ சீதா கல்யாண உற்சவம்: 41ம் ஆண்டு, ஸ்ரீ சீதா கல்யாண மஹா உற்சவ விழா , 31 மற்றும் ஏப்.,1 ல் நடக்கிறது. 31ம் தேதி, காலை, 7:00 மணிக்கு, தேவ்ஜி காலனியில் உஞ்சவிருத்தி, காலை, 10:00 மணிக்கு, அஷ்டபதி, இரவு 8:00 மணிக்கு, திவ்ய நாம பஜனை நடக்கிறது. மாயவரம், முத்துகிருஷ்ண பாகவதர் மற்றும் குழுவினர், ஸ்ரீ சீதா கல்யாண உற்சவத்தை நடத்ததுகிறார். ஏப்.,1ம் தேதி காலை, 7:00 மணிக்கு, முன்சீப் சீனிவாசபுரத்தில் உச்ச விருத்தி; காலை, 10:00க்கு, சீதா கல்யாண உற்சவம்; மாலை, 6:00க்கு, வசந்த கேளிக்கை, பவ்வளிம்பு, ஆஞ்சநேய உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !