உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் விழா

கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் விழா

அனுப்பர்பாளையம் : பெருமாநல்லுார் கொண்டத்துகாளியம்மன் கோவில் குண்டம் விழா ஏற்பாடுகள், தீவிரமாக நடந்து வருகிறது. திருப்பூரை அடுத்த பெருமாநல்லுாரில், பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் குண்டம் திருவிழா, வரும், 28ல், கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அடுத்த மாதம், 3ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு குண்டம் இறங்குதல்; தொடர்ந்து மாலை, 4:00 மணிக்கு, தேர் வடம் பிடித்தல் நடைபெறுகிறுது. இதையொட்டி, கோவில் வளாகத்தில் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடங்களில், பக்தர்கள் பொங்கல் வைக்க ஏதுவாக, தரை சமன் செய்யப்படுகிது. குண்டம் இறங்கும் பக்தர்களுக்காக, நீர் மோர் பந்தல் அமைத்தல், தடுப்புகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. ஊராட்சி சார்பில், கோவிலில், ஆறு இடங்களில் குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பிடம், நடமாடும் கழிப்பிடம் உள்ளிட்ட பணிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. குண்டம் திருவிழாவையொட்டி, திருப்பூர், அவிநாசி, குன்னத்துார், நம்பியூர் உள் ளிட்ட பகுதிகளில் இருந்து, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !