குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றம்
ADDED :2798 days ago
காரைக்குடி, குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயில் பங்குனி உத்திர விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் இரவு 7:00 மணிக்கு சுவாமி திருவீதி உலா, பகல் 11:00 மணிக்கு அபிேஷகம் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக 28-ம் தேதி இரவு 7:00 மணிக்கு வடக்கு ரத வீதியில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்ப திருவிழா நடக்கிறது. 29-ம் தேதி மாலை 4:00 மணிக்கு தேரோட்டம், 30-ம் தேதி தீர்த்தவாரி நடக்கிறது. பக்தர்கள் விரதம் இருந்து பால்குடம், அக்னி காவடி, பறவைகாவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். ஏற்பாடுகளை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் செய்து வருகிறார்.