உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏகாம்பரநாதர் பங்குனி உத்திர விழா காஞ்சியில் கொடியேற்றத்துடன் துவக்கம்

ஏகாம்பரநாதர் பங்குனி உத்திர விழா காஞ்சியில் கொடியேற்றத்துடன் துவக்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருவிழா, நேற்று காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது. சுவாமியும் அம்பாளும், சப்பரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்று விளங்கும் ஏகாம்பரநாதர் கோவிலின் பங்குனி உத்திர திருவிழா, ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு, நேற்று காலை, 5:30 மணிக்கு கொடியேற்றப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சப்பரத்தில், அம்பாளுடன் எழுந்தருளிய சுவாமி, நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு, சிம்ம வாகனத்தில் சுவாமியும், கிளி வாகனத்தில் அம்பாளும் புறப்பாடு நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, ஞாயிறு அன்று, வெள்ளி அதிகார நந்தி சேவையும், திங்கள் கிழமை அறுபத்தி மூவர் ஊர்வலமும், மறுநாள் தேர் திருவிழாவும் சிறப்பாக நடைபெற உள்ளது. வரும், 31ல் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இந்நிலையில், திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் வசதிக்காக, தற்காலிக கழிப்பிடங்கள் ஏற்பாடு செய்யப்படும் என, ஆலோசனை கூட்டத்தில் கூறப்பட்டது. ஆனால், செய்யப்படவில்லை. மேலும், மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவில், நிலமங்கை தாயாருக்கு, பங்குனி உத்திர உற்சவம், நேற்று துவங்கியது. அதுபோல, செங்கல்பட்டு வ.உ.சி., தெருவில், காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலிலும், பிரம்மோற்சவ விழா, நேற்று துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !