உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடசென்னிமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திரம் கொடியேற்றம்

வடசென்னிமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திரம் கொடியேற்றம்

தலைவாசல்: வடசென்னிமலையில், பாலசுப்ர மணிய சுவாமி கோவில் உள்ளது. முருகனுக்கு கொண்டாடப்படும் விழாக்களில், பிரசித்தி பெற்ற பங்குனி உத்திரம் வரும், 30ல் நடக்கவுள்ளது. இதற்கான தொடக்க விழாவாக, நேற்று கொடியேற்றம் நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மூலவருக்கு பால், தயிர், இளநீர், விபூதி உள்ளிட்டவற்றால், அபி?ஷகங்கள் நடந்தன. இதை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. காலை, 11:00 மணியளவில், பக்தர்கள் அரோகரா கோஷங்கள் முழங்க, கோவிலில் உள்ள மரத்தில், கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !